பல்லவியும் சரணமும் - பதிவு 18
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வைச்சேனே...
2. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று...
3. எனது ஆருயிர் ஜீவன் எனை ஆண்டாளே...
4. அறியாத கலையென்று எனைப் பாடு ...
5. கண்களால் என் தேகம் எங்கும் காயம் ...
6. நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான், அவன் இருக்கும் இடத்தினிலே ...
7. சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த, வானம்பாடி அவள்...
8. ஒளியின் நிழலில் உறவுண்டு...
9. காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு ...
10. திருப்பதி உண்டியல் சேர்ந்து விட்டாயோ, திருவண்ணாமலை குகை புகுந்தாயோ ...
11. ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும்...
12. அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
2. இந்த பச்சைக் கிளிக்கொரு ... (உழைக்கும் கரங்கள்).
3. இதயம் ஒரு கோவில் .. (,,)
4. பாட்டும் நானே! (திருவி..)
5. கணமணியே பேசு.. (சட்டம்)
உடனடியாய் நினைவுக்க வராதவை 1, 6, 10
2. இந்த பச்சைக் கிளிக்கொரு ... (உழைக்கும் கரங்கள்).
3. இதயம் ஒரு கோவில் .. (,,)
4. பாட்டும் நானே! (திருவி..)
5. கணமணியே பேசு.. (சட்டம்)
உடனடியாய் நினைவுக்க வராதவை 1, 6, 10
மன்னிக்கவும்,
5. ஓ.. வானம்பாடி..உன்னை நாடி.. (சாதனை)
1. காத்திருந்து காத்திருந்து... வைதேகி காத்திருந்தாள்
9. சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா
10 பணத்தை எங்கே தேடுவேன் - பணம்
11. தூங்காத விழிகள் ரெண்டு - அக்கினி நட்சத்திரம்
6. À¼õ À§Ä À¡ñÊ¡- À¡ðÎ ¿¢¨ÉÅ¢ø¨Ä!!
7.பூந்தேனில் கலந்து - ஏணிப்படிகள்
ஜெய்ஸ்ரீ, ஆமாம், அது நீதிக்கு தலைவணங்குதான்! ஆனா 'கண்மணியே பேசு' ரெண்டு பேரும் தப்பு, அது காக்கிச்சட்டை.
அன்பு மக்களே,
பலே, பலே! பயங்கர சுறுசுறுப்புப்பா, நீங்களெல்லாம் :-)
முதல் தடவையாக, rosavasant, ஒரு தவறு செய்திருக்கிறார்! அதாவது, சரியாய் சொல்லி, பின்னர் குழம்பி!
5-வது பல்லவியான "கண்மணியே பேசு, மௌனமென்ன கூறு" என்பது சரி தான்! திரைப்படம் "காக்கிச்சட்டை" (சட்டமும் தவறு, காதல் பரிசும் இல்லை! ஹையா ஜாலி :-))
icarus prakash, as usual, 100/100, in whatever he attempted!
6. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே! - பலே பாண்டியா
8. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், நீ வர வேண்டும்! - நூற்றுக்கு நூறு
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment